யாதும் அனுபவம்

எனக்குள் இருந்த தார்மீகக் கோபம் அனைத்து சிறு தவறுகள் மனிதம் என்ற தலைப்பில் முன்வைத்து பேசப்பட்ட யாதும்நிகழ்ச்சியில் இருந்து மேலும் தூண்டப்பட்டது என்று தான் கூற வேண்டும்.

சிறு வயது முதல் எது சரி எது தவறு எனும் பகுத்தறிவை என் பெற்றோர் எனக்கு சற்று கூடுதலாகவே கொடுத்து விட்டாரோ என்னமோ தெரியவில்லை , அனைத்துசக மனிதர் தெரிந்து செய்யும் சிறு தவறுகளுக்கு கோபம் உள்ளுக்குள் வரும், என் இப்படி மனிதமற்று நடக்கிறார்கள் என்று. அனால் அதை திருத்த தடிகேட்க தைரியத்தை என் பெற்றோர் எனக்கு அளிக்க மறந்து விட்டனர். எனக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி ஒதுங்கி நான் கோழையாகவே மாரிவிட்டேனோ என்ற சந்தேகம் எனக்கு தோன்றிவிட்டது.

மாற்றம் நம்முள் தான் பிறக்க வேண்டும் அதனை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதறிந்த உண்மைதான். நானும் அப்படித்தான் இருந்தேன்.அனால் உதாசீனம் மட்டுமே மிஞ்சியது.

யாதும் நிகழ்ச்சியில் பியுஷ் எனும் நண்பரின் உரையை கேட்டேன்.அவர் பேச்சு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.நானும் ஏதேனும் செய்யவேண்டும் எனும் என்னத்தை விதைப்பவையாக இருந்தது.

அவரிடம் பேசிய போது நான் கேட்ட முதல் கேள்வி , நான் சந்திக்கும் பிரச்சனையை எங்கிருந்து தொடங்குவது என்றுதான் . நீங்கல் முதலில் அந்த பிரச்சனையை நேரில் தொட வேண்டும் என்றார். நான் தொட்டேன் அனால் ஒன்றும் நடக்கவில்லை என்றேன். நான் மட்டும் தான் கடைசி வரை தனியாக நின்றேன் . அடுத்த கட்டமாக சம்மந்த பட்டவருக்கு கடுதாசி போடுங்கள்.பிறகும் பதில் இல்லையெனில் கோபமாக கொச்சை சொற்களால் திட்டி போராடுங்கள். இந்த பதில் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பிறர் கவனத்தை ஈர்க்க இப்படி செய்யத்தான் வேண்டும் போல் என்று தோன்றுகிறது.

அரங்கத்தின் வாயிலை விட்டு வெளியேரி சாலையை கடக்க முயன்ற போது இரு நான்கு சக்கர வாகனம் எதிர் எதிரே நின்று சாலையை வழி மறித்து சாலை நெரிசலை உருவாக்கிவிட்டனர். ஒரு புறமாக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. எவரும் நின்று செரி செய்ய முன்வரவில்லை . நான் பாதசாலையாக கடக்க முயன்று நின்றிருந்தேன். செரி நாம் சற்று வாகனத்தை நிறுத்தி வழி அமைத்து செரிசெய்வோம் என்று என்னினேன் . ஒரு புரத்தில் இருந்து விரைந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு கை அசைத்து நிற்கும்படி கேட்டேன் . முதல் வண்டி நிற்கவில்லை,விரைந்தது. அடுத்த வாகனத்தை சற்று வேகமாக கை அசைத்து நிற்க சொன்னேன் . உள்ளிருந்த ௪௦ வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கையை அலட்சியமாக அசைத்து நிற்க முடியாது என்று கூறி விரைந்து கொண்டேயிருந்தார் . இந்த நிகழ்வு என்னை சற்றே கீழே தள்ளியது என்று தான் கூற வேண்டும். இரண்டு நாட்கள் சுற்றுச்சூழல் மேலான்மை நீர் மேலான்மை மற்றும் மனிதம் மனிதம் மனிதம் என்று பேசி தீர்த்தவைகள் என்ன வாயிற்று என்று வியந்தேன். அவர்கள் கூறியது சென்னையில் நடந்த இயற்கை சீற்றத்திற்குப் பிறகு மக்களின் மனதில் மனிதம் உயிர்ப்பித்தது என்பதுதான். ஆனால் நான் கண் கூடாக வெள்ளம் வடிந்த பிறகு எங்கும் அதனை காண முடியவில்லை. இதற்கு இனோர் நிகழ்வு சான்று. நிகழ்வின் நிறைவுக்குப் பின் அங்குள்ள ஒருவரிடம் எதார்த்தமாக பேச நேரிட்டது. அவர் genetic engineer படித்தவர். நான்தகவல் தொழில்நுட்பம் படித்தவன் என்று தெரிந்தவுடன் என்னை பற்றிய ஒரு தவரான அபிப்ராயத்தை உருவாக்கி தன் உடன் வந்தவரிடம் கதை கட்டினார். இவர் வெளி நாட்டவர்க்கு நாம் உறங்கும் வேளையில் அவர்க்கு தேவையான வேலையை இங்கிருந்து செய்வார்கள் . வேர் ஏதும் பெரிதாக செய்பவர்கள் இல்லை என்றார். எனக்கு சட்டென்று கோபம் வந்தது. அடக்கிவிட்டு, ஏன் தலைவரே தகவல் தொழில்நுட்பத்தை இவ்வளவு குறுகிய பார்வையுடன் பற்பதுமட்டுமல்லாமல் அதை மற்றவர்க்கும் அவ்வாரே விளக்குகிரீர் என்றேன். ஏதோ ஒரு காழ்புணர்ச்சியில் நான் கூறியதை மறுத்துக்கொண்டே இருந்தார். அவர் உடன் வந்தவர் செரி எதற்கு நீங்கள் சண்டை போடுகிரிர்கள் என்று தடுத்து வந்த வேலையை பார்ப்போம் என்று விடை பெற்றார். இப்படி இரண்டு நாள் முழுவதும் பேசித்தீர்த்த மனிதம் தன்னொழுக்கத்தை நான் எங்கும் காண இயலவில்லை . சாக்கடை என்று என்னைப்போல் பலர் விலகிச்சென்றதால் தான் தன்னொழுக்கம் கெட்டு இப்பொழுது அடைத்துக்கொண்டு நோயாக உருவெடுக்கிறது .

நான் மகாத்மாவோ ஏசுவோ அல்ல, நீங்கள் இவன் யார் இவ்வளவு பேச என்று நினைக்க .ஒரு குழந்தை மனம் கொண்ட என்னை விட பெரியவனை கண்டு பயப்படும் ஒரு சாதாரன மனிதன்.

சரி ஏன் இவ்வளவு சீர் கேடு தன்னொழுக்கம் கெடும் அளவிற்கு என்று சிந்திக்க முயன்றேன். நிச்சயம் எங்கோ தவறு நடந்து பரவியுள்ளது என்று தெரிகிறது. எந்த மனிதனும் பேராசைக்காரன் தான் அதற்காக இத்தனை பெரிய அளவா. நம்மை வழி நடத்துபவர் சரியில்லை என்றால் நிச்சயம் இவ்வளவு கேடு வரத்தான் செய்யும். சராசரி அறிவுத்திறன் கொண்ட மாணவன் படிக்கவில்லை எதிலும் ஈடு படவில்லை என்றல், அவர் ஆசிரியர் மற்றும் பெற்றோர் தான் முழுக்காரணம். அதே போல் ஆட்சியாளர்கள் அந்த அந்த இடத்தில் சிறு சிறு தவரை கண்டித்திருந்தால் இத்தனை பெரும் கூட்டம் இத்தகு சிறு சிறு தவரை செய்ய பழகியிருக்காது .

பார்ப்பவை அனைத்தும் சிறிது

உடையவை அனைத்தும் சிறிது

வேண்டுபவை மட்டும் பெரிது

உங்கள் அறிவுக்கண்ணை திரங்கள்

பார்ப்பவை உடையவை பெரிதாகும்

வேண்டுபவை சிறிதாகும்

மனங்கள் மாறிடும்

மாற்றத்தை உருவாக்கிடும்

உணருங்கள்

உணர்த்துங்கள்.

Advertisements